Home உலகம் பிரிட்டன் நாட்டில் வேகமாக பரவும் எரிஸ் வைரஸ் – அடுத்த அலைக்கு தயாராகும் கோவிட்….!

பிரிட்டன் நாட்டில் வேகமாக பரவும் எரிஸ் வைரஸ் – அடுத்த அலைக்கு தயாராகும் கோவிட்….!

by Pramila
0 comment

பிரிட்டனில் கோவிட் வைரஸின் புதிய வகையான எரிஸ் (Eris) என்ற வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.தனிநபர் இடைவெளி, கைகளை கழுவுதல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் தற்போது அறிவுரை கூறிவருகிறது. 

புதிய வகையான எரிஸ் (Eris) என்ற வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கூறபடுகிறது.அறிவியல் முறையில் றையில் EG. 5.1 என்றும் இது ஒமிக்ரான் வைரஸின் துணை பிரிவாக இந்த எரிஸ் வைரஸ் உள்ளதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஆசியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 7 பேரில் ஒருவருக்கு இந்த வைரஸ் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எரிஸ் வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாக இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மாதம் 3 ஆம் தேதி இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த வைரஸின் பாதிப்பு குறைவாக உள்ளது. வயதானவர்கள் சற்று கூடுதலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதிய வகை வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பதால் பொதுமக்கள் மீண்டும் தனிநபர் இடைவெளி, கைகளை கழுவுதல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறி வருகின்றனர்.இந்த வைரஸ் குறித்து மேலதிகமாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனில் சமீபத்தில் வெளிவந்த பர்பீ, ஓப்பன் ஹெய்மர் படங்களுக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக தியேட்டர்களுக்கு சென்றனர். இதுவும் எரிஸ் வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்க கூடும் என்கிறார்கள். 

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign