இந்த வருடத்திற்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் படி இந்தியாவிலிருந்து உலகநாடுகளில் 57 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.இந்த தரவரிசையில் இந்தியா பொருத்தவரையில் கடந்த ஆண்டு 87 வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஏழு இடங்கள் முன்னேறி 80 வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா.
நம் நாட்டு அதாவது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 57 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம், இந்த 57 நாடுகளில் பிஜி, பூட்டான், இலங்கை, இந்தோனேஷியா, துனிஷ்யா, ஜிம்பாப்வே,கம்போடியா,இன்றைய நாடுகள் இடம்பெற்றுள்ளன. உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்த ஆண்டு சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
சிங்கப்பூரின் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை இந்த ஆண்டு சிங்கப்பூர் பெற்றுள்ளது. அது மட்டும் இன்றி சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மொத்தம் உள்ள 227 நாடுகளில் 192 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்,
இந்த தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ஜப்பான் இந்த வருடம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ஆஸ்திரேலிய, பின்லாந்து, பிரான்ஸ், தென் கொரியா, ஸ்விடம், லக்சம்பெர்க், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதனால் இந்நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.பிரெக்சிட் நடவடிக்கைகளுக்கு பின்னால், இந்த தரவரிசையில் பிரிட்டன் நாலாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
2014 ஆம் ஆண்டு தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடைசி மூன்று இடத்தை பிடித்த நாடுகள் சிரியா, ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் பிடித்துள்ளன. நாட்டிலிருந்து விசா இல்லாமல் 27 நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடியும்.