வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் புத்தாண்டு வாழ்த்து செய்திகளின் பெயரில் நடைபெறும் சைபர் மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடி நடைபெறும் விதம்:
அறிமுகமில்லாத எண்களிலிருந்து ‘புத்தாண்டு வாழ்த்துக்கள்’ எனும் பெயரில் ஒரு APK கோப்பு அல்லது லிங்க் அனுப்பப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்து, APK கோப்பை பதிவிறக்கம் செய்தால், உங்கள் மொபைல் சாதனம் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், உங்கள் வங்கி கணக்கு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடிகள் நடைபெறலாம்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் APK கோப்புகள் அல்லது லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.
வாட்ஸ்அப் செயலியில் ‘ஆட்டோ டவுன்லோடு’ அம்சத்தை முடக்கவும், இதனால் உங்கள் அனுமதியில்லாமல் எந்தவொரு கோப்பும் பதிவிறக்கம் செய்யப்படாது.
புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால், Google Play Store அல்லது Apple App Store போன்ற அதிகாரப்பூர்வ தளங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்வதற்கு முன், அவற்றின் URL-ஐ சரிபார்த்து, அதிகாரப்பூர்வமானதா என்பதை உறுதிசெய்யவும்.
புகார் அளிக்க:
இத்தகைய சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்டால், உடனடியாக www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம்.
புத்தாண்டு வாழ்த்து, பரிசு கூப்பன், இலவச டேட்டா, அரசு திட்டங்கள், வங்கி சேவைகள் போன்றவற்றின் பெயரில் வரும் அறிமுகமில்லாத லிங்குகள் மற்றும் கோப்புகளை தவிர்க்கவும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுப்பியிருந்தாலும், அவற்றை திறப்பதற்கு முன் முழுமையாக சரிபார்க்கவும்.