சுனாமி
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் உண்டான ஆழிப்பேரலை, கடல்கோள் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சுனாமி கிழக்கு கடலோர பகுதிகளான சென்னை முதல் கன்னியாகுமரி வரை பலத்த சேதத்தை உண்டாக்கி உயிர் பாலியையும் அதிக அளவில் செய்தது.
சுனாமி உண்டான தினத்தையும் அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் அவ்வளவு எளிதாக அனைவராலும் மறந்துவிட முடியாது (26 .12. 2024). அன்றுதான் ஆழிப்பேரலை எனும் சுனாமியானது இந்தியாவை ஒரு புரட்டு புரட்டி எடுத்தது.
இது இந்தியாவை மட்டுமல்லாமல் பல நாடுகளையும் உள்வாங்கி விட்டு சென்றது. மிகப்பெரிய ராட்சத அலைகளை உண்டாக்கி அனைத்தையும் வாரிசுருட்டி சூறையாடி சென்று விட்ட பேரலைகளை இன்றும் மறக்க முடியாது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடைமைகளையும், உறவுகளையும் இழந்து இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இன்றும் மிகுந்த வருத்தத்துடன் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உலகில் சுனாமி தாக்கம் உண்டாகி இன்றுடன் இருபது ஆண்டு முடிவடைந்தது இந்த நாள் சுனாமி நினைவு தினம் ஆக ஒவ்வொரு நாட்டிலும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது .இத்தகைய மீளா துயரநாளின் வடு என்றும் மறையாதது ஆகவே இருக்கிறது. காவிரி டெல்டாவின் கடைக்கோடியான நாகையில் மட்டும் 6000க்கும் அதிகமான மக்கள் சுனாமியினால் உயிரிழந்தனர் கடலூரில் 610 பேரும் சென்னையில் 26 பேரும் உயிரிழந்தனர் அது மட்டுமல்லாது தமிழகத்தை பொறுத்தவரை பத்தாயிரத்துக்கும் அதிகமானார் சுனாமியால் உயிரிழந்தனர்.
20 ஆண்டு சுனாமி தினமான இந்த நாளை அனைத்து கடலோர கிராம மக்களும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்த கடலில் பால் ஊற்றியும் ,பூ தூவியும் வருகின்றனர்.சுனாமியில் சிக்கி உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ மணங்குடி கிராமத்தில் தங்கள் உறவினர்களின் நினைவிடங்களில் மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மீனவ மக்கள்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடலூரில் 20 வது சுனாமி தினத்தை ஒட்டி உயிரிழந்தவர்களுக்காக பொதுமக்கள் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுனாமி நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம் ,அதை எடுத்து தூத்துக்குடி நாட்டு படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் சுனாமி தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.