வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெயிலின் தாகம் அதிகம் உள்ளத்தால் மக்கள் கடும் அவதி பட்டு வருகிறார்கள். அந்நாட்டு மக்கள் அங்குள்ள கடற்கரை போன்ற பகுதிகளில் மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.இந்த வெப்ப அலை காரணமாக அந்நாட்டில் உள்ள மக்கள் பலரும் வெப்ப அலையல் பாதிக்கபட்டு வருகிறார்கள்.
இதை போன்ற வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த 2003ஆம் ஆண்டு 70 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 62 ஆயிரம் பெரும் உயரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ஐரோபியாவில் பல்வேறு பகுதிகளில் பரவலாக காட்டு தீ பரவி வருகிறது.இந்த பகுதியில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதிகளும் உள்ளடங்குகிறது.ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.இந்த வெப்பத்தின் காரணமாக இத்தாலியில் 16 நகரங்களுக்கு இத்தாலி அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது,வெப்ப அலையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வென்றும் என்று கூறியுள்ளது.இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் வெப்ப ஆலோசகர் ஆனா ஜான்நேர்ன் கூறியது:
தற்போது வெப்ப அலையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.இது மேலும் தீவிரம் அடையும் என்றும் இதை எதிர் கொள்ள உலக மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.பகலில் அதிகபட்ச வெப்ப நிலையை காட்டிலும் இரவில் குளிர்ந்தபட்ச வெப்ப நிலை அதிகமாக இருக்கிறது.
மீண்டும் மீண்டும் அதிக இரவு நேரங்களில் வெப்ப நிலை ,மனித ஆரோகியதிற்கு இது ஆபத்தானது.ஏன் என்றால் நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது ,சில நேரங்களில் இது மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது ,நம் நாடு வளர்ந்து நகரமயமாகி வருகிறது இதனால் வெப்பம் அலை உச்சத்தை தொடுகிறது.அதுமட்டுமின்றி வயதான மக்களிடத்தில் சுகாதார ஆபத்து எழிதில் வளர்கிறது.
இந்த வெப்ப அலைகளை தடுபதற்கு கார்பன் எரிபொருட்களை நிறுத்தவேண்டும்.அதுமட்டுமின்றி அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.வட அமெரிகாவில் இருந்து ஐரோப்பிய ,ஆசியா வரையில் வெப்ப அலைகான எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது…