சிறியாவில் தொடர் தாக்குதல் நடந்து வருகிறது . சிரியாவின் இரு விமான நிலையங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது . இந்த நிலையில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் , அலெப்போ சர்வதேச விமான நிலையங்களுக்கு ஈரான் நாட்டில் இருந்து விமானங்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . எனவே இதை தடுத்து நிறுத்துவதற்காக சிரியாவில் இரு விமான நிலையங்கள் மீதும் இஸ்ரேல் நேற்று ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதைகள் நாசம் அடைந்தன . எனவே இதன் காரணமாக டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ ஆகிய இரு சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்போது ரத்து செய்துள்ளனர் . ஈரானில் இருந்து கொண்டுவர பட்ட ஆயுதங்கள் நிறைந்த விமானம் மீண்டும் ஈரானுக்கே சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலும் காசா நகரம் மீது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் மக்கள் பாதிப்பு அடைகின்றனர் , இந்த போரால் பொதுமக்கள் பாதிக்காதவாறு கவனமாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது .