Home » Blog » பேருந்து ஓட்டுநருக்கு அடித்த லாட்டரி….!

பேருந்து ஓட்டுநருக்கு அடித்த லாட்டரி….!

by Pramila
0 comment

ஒருவருக்கு அதிர்ஷ்டம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம் . அது எப்படி வரும் என்பது யாருக்கும் தெரியாது , சில சமயத்தில் இப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தால் பலரது வாழ்க்கை தலைகீழாக மாறும் . அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டம் தான் அமெரிக்காவில் வாழும் ஒருவருக்கு கிடைத்துள்ளது .

அமெரிக்க நாட்டில் கெண்டுக்கி நகரில் உள்ளவர் ஜேம்ஸ் கீயோன் . இவர் ஜெஃபர்ஸன் கவுண்டி பொதுப்பள்ளியில் 10 வருடங்களுக்கு மேலாக பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் . அதிர்ஷ்டம் என்பது எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது அது இவரது விஷயத்தில் சரியாக உள்ளது . இவர் சமீபத்தில் பவர்பால் லாட்டரி ஒன்றை வாங்கியுள்ளார் . அதில் நான்கு வெள்ளை நிற பால்கள் சரியாக பொருந்தியிருந்தது , இதற்கு பரிசு தொகையாக சுமார் இந்திய மதிப்பில் ரூபாய் 82,93,735 கிடைத்துள்ளது . மேலும் இவர் எப்போதுமே ஒரு முறைக்கு இரண்டு முறையாக லாட்டரிகளை வாங்குவது வழக்கம் அந்த வகையில் இவரது பரிசுத்தொகை இரண்டு மடங்காக மாறி உள்ளது . இந்தத் தொகையை வைத்து தனது ஓய்வு காலத்தை சந்தோஷமாக வாழ்வை கழிக்க திட்டம் தீட்டியுள்ளார்….,

இதை பற்றி அவர் கூறுகையில் :
என்னால் லாட்டரி விழுந்ததை நம்ப முடியவில்லை . நான் ஒரு முறைக்கு நான்கு முறை அந்த எண்களை சரி பார்த்தேன் . அதன் பிறகுதான் நான் அதை முழுமையாக நம்பினேன் நமக்கு ஜாக்பாட் அடித்து விட்டது என்பதை . முதலில் அமெரிக்க டாலரின் 50,000 பரிசு விழுந்தது . எனக்கு விழுந்த தொகை பவர் பிளே காரணமாக இரண்டு மடங்காக மாறியது என சந்தோஷமாக அவர் கூறினார் .

லாட்டரி விழுந்த விஷயத்தை அறிந்து அவரது மனைவியும் சந்தோஷம் அடைந்தார் . இதில் வரி பிடித்ததை போக ஜேம்ஸ்க்கு ரூபாய் 59 லட்சம் கிடைக்கும் . பணத்தை வைத்து என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கணவன் மனைவி யோசித்து கொண்டுள்ளனர் . அந்த வகையில் ஜேம்ஸ்க்கு பூனை மிகவும் பிடிக்கும் என்பதால் உள்ளூரில் இயங்கி வரும் பூனை மீட்பு மையத்திற்கு சில தொகைகளை செலவு செய்யலாம் என்றும் , தங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு இன்று முடிவு செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.