நாட்டின் முதல் முதலில் மிஸ் நெதர்லாந்தது பட்டத்தை திருநங்கை ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார். ரிக்கி வலேரி கோலே இவர் நெதர்லாந்தில் மாடலிங் துறையில் பிரபலமாக உள்ளவர், 22 வயதான இவர் பல படங்களிலும் நடித்துள்ளார்,இவர் மிஸ் நெதர்லாந்து பட்டத்தை வென்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதுமட்டுமின்றி நெதர்லாந்தின் மிஸ் நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்,இந்த வெற்றியின் காரணமாக இவர் இந்த ஆண்டு உலக அழகி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பட்டம் பெற்ற பின் பேசிய ரிக்கி வலேரி கோலே மிஸ் நெதர்லாந்து ஆன பிறகு, மிஸ் வேர்ல்ட் போட்டியில் சேர ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறினார், தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் “ நான் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன், அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, இதன் மூலம் எனது சமூகத்தை பெருமைப்படுத்தவும் அதை வெளி கொண்டு வரவும் முடியும்” என்று கூறியுள்ளார்.இவை இணையதளத்தில் வைரலான காரணத்தினால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது…..