இந்தியா பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் கேக்கப் அழைத்ததன் காரணமாக அரசு முறைபயணம் சென்றுள்ளார்.மோடி அமெரிக்கா செல்வது இரண்டாவது முறையாகும். அமெரிக்கா சென்ற மோடிக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மோடிக்கு பழமையான விண்டேஜ் கேமரா ஒன்றை பரிசாக அளித்தார். மேலும் ராபர்ட் பிராஸ்ட் எழுதிய நூல் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
மோடி அமெரிக்க அதிபருக்கு அன்பு பரிசாக சந்தன பெட்டியில் பத்து வகையான பரிசுகளை அளித்தார்.இந்த பெட்டியில் ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பு பொருள்கள் இருந்தது.இந்த சந்தன மரம் கர்நாடகாவில் இருந்து பெறப்பட்டு பெட்டியானது ஜெய்பூரில் செய்யப்பட்டது.அதனுள் இருந்த வெள்ளி பிள்ளையார் கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்டது.
உத்திரபிரதேசத்திலிருந்து தாம்பர தட்டு,தமிழ்நாட்டிலிருந்து எள்,ராஜஸ்தானில் இருந்து தங்க நாணயம்,பஞ்சாப் நெய்,ஜார்கண்ட் பட்டு,உத்தரகாண்ட் அரிசி,மகாராஷ்டிரா வெல்லம்,வெள்ளி நாணயம்,குஜராத் உப்பு போன்றவை இருந்துள்ளது. மேலும் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.மோடியை சந்திக்க 7000திற்க்கு மேல் இந்தியா வாழ் மக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மேலும் மோடி அதிபர் மனைவிக்கு 7.5 கேரட் வைரம் பரிசாக அளித்தார். அந்த வைரமனது சுற்றுசூழக்கு ஏற்ப இருக்குமாம்.