குஜராத் மாநிலத்தின் இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையில் பணிபுரியும் நிலேஷ் வல்ஜிபாய் என்றவர் நம் நாட்டின் தேச பாதுகாப்பு தொடர்புடைய ரகசிய தகவல்களை பாகிஸ்தான் நாட்டுக்கு Whatsapp மூலமாக தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை பணியாளர் நிலேஷ் வல்ஜிபாய் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை புஜ் என்ற பகுதியில் நடந்து வரும் புதிய கட்டுமான பணிகள் பற்றிய விவரங்களை whatsapp மூலமாக பகிர்ந்து உள்ளார் பாகிஸ்தான் நாட்டிற்கு.
இதைக் கண்டறிந்த பயங்கரவாத ஒழிப்பு படையினர் கைது செய்து விசாரித்ததில், நிலேஷ் வல்ஜிபாய் தகவல்களை Whatsapp மூலம் பகிர்ந்தது உண்மையாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .