கிறிஸ்மஸ் தாத்தா என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது குட்டையான தோற்றம், பருத்த உடல், சிவப்பு கம்பளி ஆடை, சிவப்பு பனிக்குல்லாய், தோளில் மூட்டை சுமந்து கொண்டு வருவார் என்று தான் அனைவரும் ஞாபகத்திலும் இருக்கும் பிம்பம். ஆனால் உண்மை என்னவென்றால் துருக்கியைச் சேர்ந்த புனித பாதிரியார் பல ஏழை மனிதர்களின் துயர நிலைக்கு ஆதரவாக இருந்தவர். இவரின் வாழ்க்கை வரலாறு கிறிஸ்மஸ் தாத்தா கதாபாத்திரமாக உருவெடுத்தது. இவ்வுலகத்திற்கு கிறிஸ்மஸ் தாத்தா கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தவர் க்ளெமென்ஸி மூர் என்பவர். மேலும் கிறிஸ்மஸ் தாத்தாவும் சுவாரசியமான தகவல்களை தொடர்ந்து இந்த பதிவில் பார்ப்போம்..
மேற்கத்திய நாடுகளிலும் சில கீழே நாடுகளில் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் இப்பொழுது உலகம் எங்கும் பரவி டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே நினைவிற்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா தான். குழந்தைகள் இவரை சாண்டா என்றும் சாண்டா கிளாஸ் என்றும் அன்போடு அழைக்கின்றனர். இவ்வுலகில் கிறிஸ்துமஸ் தாத்தாவை அறியாத குழந்தைகலே கிடையாது.
யார் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா..?
அனைவராலும் கொண்டாடப்படும் உண்மையான கிறிஸ்துமஸ் தாத்தா யார் தெரியுமா..? மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த நிக்கோலஸ் என்பவர் தான். இவர்தான் இவ்வுலகில் கொண்டாடும் உண்மையான கிறிஸ்துமஸ் தாத்தா. ரோம சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர்தான் இந்த கிறிஸ்மஸ் தாத்தா. இவர் ரஷ்யா மற்றும் கிரீஸின் புரவலர் துறவி ஆவார். துருக்கி நாட்டில் பிஷப்பாக பணியாற்றி பல ஏழைகளின் துயரை துடைத்த சிறந்த மனிதர். சின்ட் நிக்கோலஸ் என்ற இவரது பெயரை காலப்போக்கில் மக்கள் சாண்டா கிளாஸ் என்று அழைத்தனர். வாழ்க்கையில் அடித்தள மக்களின் மேம்பாட்டுக்காகவும், சமூகத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாயத்திற்காகவும் தனது வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்த மாமனிதர்.
இவர் செய்யும் உதவிகள் அனைத்தும் அடித்தள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைந்தது. மக்களின் தேவை அறிந்து அவர்கள் கேட்காமலே அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். உதவி செய்யும் மனப்பான்மை, அனைவரிடமும் அன்பாக செயல்படும் குணம், குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை பரிசாக கொடுத்தல் போன்ற செயல்பாடுகளை வாழ்க்கையாக வாழ்ந்தவர் தான் நிக்கோலஸ்.
நிக்கோலசின் முழு சொத்துகளையும் விற்று ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்தார். மனிதர்களின் குறைகளை ஆலயத்தில் கடிதமாக எழுதி வணங்கி வந்தால் அவர்களின் குறைகள் நீங்கிவிடும் என்று நிக்கோலஸ் தெரிவித்திருந்தார். அதன்படி மக்களும் அவர்கள் அது குறைகளை கடிதத்தில் எழுதி ஆலயத்தில் வைத்து வணங்கி வந்தனர். அந்த கடிதங்கள் அனைத்தையும் நிக்கோலஸ் படித்து அதன் நியாயமான கோரிக்கைகளை அவர்களுக்கு தெரியாமலேயே நிறைவேற்றுவதை வழக்கமாக வைத்து வந்தார்.
மக்களுக்கு தேடி தேடி உதவிய நிக்கோலஸ் மூன்றாம் நூற்றாண்டில் டிசம்பர் 6 ஆம் நாள் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இந்த நாளை பண்டிகை நாளாக ஐரோப்பியாவில் கொலாகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிக்கோலஸ் இறந்த பின்பு அவரது சடலத்தை மைரா என்கின்ற இடத்தில் கல்லறை அமைக்கப்பட்டது. இந்த பண்டிகை நாள் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்ற வருகின்றனர். ஆறாம் நூற்றாண்டில் இவரது கல்லறை மிகவும் உலக நாடு மத்தியில் மிகவும் பிரபலமானது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கிறிஸ்மஸ் தாத்தாவின் வேடம் அணிந்து ஏழை மக்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.