உலகில் ஒவ்வொரு பகுதியாக அழிந்து கொண்டே வருகிறது, ஆனால் உலகம் முழுவதும் ஒரு நாள் அழியும். அது எப்போது எப்படி என்று யாரும் அறிந்திராத ரகசியமாகவே உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் உலகம் அறிவதற்கான வாய்ப்புகளைச் சொல்லி அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். உலகம் அழிவதைப் பற்றி சரியான கருத்து தெரியாத காரணத்தால் இதற்கு பல்வேறு கட்டமைப்புகள் வெளிவந்துள்ளன.
உலகம் அழிவதற்கான காரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கப்படுகிறது மனிதனால் அன்றாடம் உருவாக்கப்படக்கூடிய செயல்கள் உலகம் முடிவடைய காரணமாகவும் கோட்பாடாகவும் உள்ளது.
விண்கற்கள் மூலம் உண்டாகும் அழிவு
உலகின் முடிவைப் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன அதில் ஒன்று வின்கற்களால் ஏற்படும் பேரழிவு அதைப்பற்றி காண்போம். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கோள் ஒன்று மோதப்பட்டதால் டைனோசர் இனங்கள் அழிந்து விட்டன என்று மக்களால் நம்புகின்றனர். இதனால் மனிதர்கள் உலகில் ஏற்படும் தீ விபத்து மற்றும் சுனாமி போன்றவற்றினால் கொஞ்சம் கொஞ்சமாக உலகின் பல பகுதிகள் அழிந்து வந்துள்ளது. கோள்கள் மோதுவதால் அதிலிருந்து உண்டாகக்கூடிய ஆற்றல் பல மடங்காக வெளிப்படும் இதனால் மனித இனமே அழியக்கூடிய அளவுக்கு வாய்ப்புள்ளது என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
வளிமண்டல மாசுபாடு மற்றும் சூரிய ஒளியை தடுக்கக்கூடிய செயல்முறைகள் அனைத்தும் மக்களின் அழிவுக்கு வழிவகுக்கும் இயற்கையை நாம் நாசம் செய்வதால் அது நமக்கே தீங்காக மாறும். இதனால் உண்டாக கூடிய காலநிலை மாற்றமும் பூமியில் உள்ள பெரும்பாலான உயிர்களை அழிக்க நேரிடும் இது போன்ற பேரழிவுகளை தடுக்க விண்வெளி நிறுவனங்கள் தற்போது பூமிக்கு அருகில் உள்ள பொருட்களை பார்வையிடுகின்றது.
எரிமலை வெடிப்புகளால் உண்டாகும் அழிவு
உலக அழிவுக்கு எரிமலை வெடிப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு கோட்பாடு உள்ளது. டேய் எரிமலைகள் வெடிப்பதனால் மிகப்பெரிய அளவில் மாக்மா சாம்பல் வாயு வளிமண்டலத்தில் வெளிப்படுத்துகிறது.
இந்தோனேசியாவில் உள்ள டோபா கால்டெராவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு சுமார் 74 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது .இது உலக அளவில் மாபெரும் தாக்கத்தையும் சேதத்தையும் உண்டாக்கியது.
இது எரிமலை வெடிப்பதனால் உண்டாகக்கூடிய வாயு சூரிய ஒளியை தடுக்கும் ஆற்றல் உள்ளது இது வெப்பநிலையை பாதாளத்திற்கு தள்ளும். இவ்வாறு எரிமலை வெடிப்பு ஏற்படுவதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் விவசாயம் மற்றும் உணவு வ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும் இதன் காரணமாக மக்கள் பசி பட்டினி போன்ற நிலைக்கு ஆளாக்கப்படுவர். சூப்பர் எரிமலை வெடிப்புகள் பற்றி புவியியல் ஆய்வாளர் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.
வானிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவு
மனிதன் தன்னுடைய தேவைக்காக காடுகளை அழித்தல் மற்றும் ரசாயன பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றை அதிக அளவில் செய்து வருகின்றார்கள். இதன் விளைவாக காலநிலையில் மாற்றம் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை சூறாவளி, வறட்சி ,வெப்ப அலைகள், பணிகட்டி உருக்கம்,போன்ற கடுமையான காலநிலை மாற்றம் உண்டாகும் இதனால் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து ஒரு நாள் முடிவுக்கு வரும் இத்தகைய மாற்றங்களை மனிதர்களே உருவாக்க காரணமாக அமைகின்றன
அணு ஆயுதப் போர் மூலம் அழிவு
அணு ஆயுதங்கள் வெடிப்பு உடனடி அழிவு உண்டாக மிகப்பெரிய காரணமாக உள்ளது இது உயிர் சேதத்தை உண்டுபடுத்துவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலையும் நீண்ட நாட்களுக்கு பாதிப்புக்கு உள்ளக்குகிறது.
அணுக்கருவினால் உண்டாக கூடிய கதிர்வீச்சின் காரணமாக உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிப்பு உண்டாகி பேரழிவை ஏற்படுத்தும்.
செயற்கை நுண்ணறிவு மூலம் அழிவு ஏற்படுதல்
மனிதனால் கண்டறியப்பட்ட செயற்கை நுண்ணறிவுகள் மனிதனுக்கே தீங்காகும் என்ற வாய்ப்பும் அதிகம் உள்ளது இது மனித வாழ்க்கையின் பல அம்சங்களை எளிதாக்குகிறதது. ஒரு வகையில் நன்மை தந்தாலும் மற்றொரு வகையில் அது நமக்கு தீமை தான். அறிவியலின் உச்சகட்ட வளர்ச்சி ஆன ஏ.ஐ செயலிகள் மனிதனின் அறிவை விட பல மடங்கு ஆற்றல் உள்ள உடைய திறமை மிக்க இயந்திரங்கள் ஆகும். இதன் வெளிப்பாடானது மக்களுக்கு வேலையை இல்லை என்ற நிலைக்கு கூட ஒரு கட்டத்தில் தள்ளும் அளவிற்கு ஆற்றல் உடையது. எக்ஸ் நிறுவன உரிமையாளரும் மிகப்பெரிய தொழிலதிபருமான எலான் மஸ்க் ஏய் சேலைகளிடம் வச்சிருக்கியாக இருக்க வேண்டும் என்று கருத்தை வெளியிட்டுள்ளார்.