புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் விபத்து பற்றி அனவரும் அறிந்திருப்போம்.இந்த சம்பவம் 100 ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.இந்த உண்மை சம்பவத்தை கொண்டு 1997 ஆம் ஆண்டு படம் எடுக்கப்பட்டு நல்ல வசூல் கிடைத்துள்ளது.
இந்த கப்பலானது சேதத்துடன் கனடா நாட்டில் “நியூபவுன்ட்தீவில்” இருந்து 595 கி.மீட்டரில் 13,000 அடி ஆழத்தில் அட்லாண்டிக்கில் உள்ளது. இதனை காண்பதற்காக வாஷிங்டனில் உள்ள “ஓசன்கேட் எக்ச்படீசன்ஸ்” நிறுவனம் 22 அடி நீளம் உள்ள ஒரு நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி இருந்தது.தற்போது 5 பேர் டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்று இருக்கிறார்கள்.மேலும் கிளம்பிய சிலமணி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.96 மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் எடுத்துச் சென்றுள்ளனர்.அந்த கப்பலை தீவிரமாக தேடி வருவதாக கூறுகின்றனர்.