அமெரிக்காவில் செயற்கை கோழி இறைச்சிக்கு தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆய்வுக்கூடங்களில் விலங்குகளின் தசைகளில் இருந்து எடுக்கப்படும் செயல்களை வைத்து இறைச்சியானது வளர்க்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இது போன்ற ஆய்வுக்கூடங்களில் செயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட இறைச்சியை தற்பொழுது அமெரிக்காவில் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கோழிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட செல்களை அவற்றுடன் சில சத்துக்களை சேர்த்து ஆய்வகங்களில் செயற்கையான முறையில் கோழி இறைச்சி உருவாக்கப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் இறைச்சியின் கொழுப்பு எலும்பும், இல்லாமல் காணப்படும். மேலும் இதற்கான செலவு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.