முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் சோர்வு காரணத்தால் பரிசோதனைக்காக சென்றுள்ளார், அதுமட்டுமின்றி இவர் இரைப்பை தொடர்பான மருத்துவ நிபுணர்களை சந்தித்து பரிசோதனை பெற்றுள்ளார் என்றும் கூறபடுகிறது.
மருத்துவமனை வெளிட்டஅறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியுட்டுள்ளது அதில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை (இன்று) காலை வீடு திரும்புவார்” எனவும் மருந்துவமனை நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் பரிசோதனைகள் முடிந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளார்.