இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை போக்குவரத்து துறை துணை ஆணையர் தலைமையில் நடத்தினர்.
கடந்த 10 ஆண்டுகளாக , ஆட்டோகளின் மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர் . தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மீட்ட கட்டணம் என்பது உயர்த்தப்படாமல் உள்ளது என்றும் இதனால் கட்டணத்தை உயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர் . அதுமட்டுமின்றி தற்போது இருக்கும் சூழ்நிலையில் அதிகரித்து வரும் ஓலா மற்றும் உபேர் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து இதற்காக அரசை தனியாக ஒரு செயலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் . இதனால் தமிழக போக்குவரத்து துறை “ஸ்டார்ட் அப் டிஎன்” மற்றும் தனியார் நிறுவனமான “டாடோ” என்னும் செயலை உருவாக்கியது .
கிண்டியில் நடந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய செயலி எவ்வாறு உருவாக்கப்பட்டது என்றும் அதனை உபயோகிப்பது எப்படி என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது . அதுமட்டுமின்றி மேலும் மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்டன எனவே விலைவாசியின் உயர்வை கணக்கில் கொண்டு மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் பல கோரிக்கைகள் விடுத்தனர் .