நேற்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையின் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் திடீரென்று பெட்ரோல் குண்டு வீசினார் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் மடக்கி பிடித்தனர் . அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தேனாம்பேட்டை சேர்ந்த கறுக்கா வினோத் என்றும் , அவர் இதற்கு முன்பு சிறையில் இருந்ததாகவும் அப்போது வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால் கோபத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார் .
வினோத்தை கைது செய்த போலீசார் வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இதைப் பற்றி எப்.ஐ.ஆர் பதிவில் பெட்ரோல் குண்டு அதிக சத்தத்துடன் வெடித்தது , அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல் , அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர் .