தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தற்பொழுது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அவரது முதல் அறிக்கை குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய நிலையில் அந்தச் சட்டத்திற்கான விதிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் என்றும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆட்சியாளர்கள் இதுபோன்ற எந்த ஒரு சட்டத்தையும் தமிழ்நாட்டில் நடத்த மாட்டோம் என்றும் உறுதியளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதை தொடர்ந்து மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் மத்திய அரசை விமர்சிக்காமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.