தென்த தமிழகத்தில் கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலையும் வெளியிட்டுள்ளது. மேலும் வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட சற்று வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் என்றும் வெப்பநிலையின் அளவானது 33 – 34 டிகிரி செல்சியஸ் டிகிரி வரை இருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மன்னார் வளைகுடா பகுதியில் வருகின்ற இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சூறாவளி காற்றானது மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும். சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.