முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் சாந்தன் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனை ஆனது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இலங்கை தமிழரான சாந்தனும் விடுதலை செய்யப்பட்டார். சாந்தன் திருச்சியில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இவருடன் ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார் ஆகியோரம் இவருடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து சாந்தன் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கடந்த ஜனவரி மாதம் சாந்தனுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சாந்தன் அனுப்பி வைக்கப்பட்டார். சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு மற்றும் உடலில் பல பாதிப்புகள் இருப்பதை மருத்துவர்கள் பரிசோதனைகள் தெரிவித்தனர்.
மேலும் உயர் இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, சுவாசக் கோளாறு என சாந்தன் உடலில் பல பிரச்சனைகள் இருப்பது மருத்துவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அனுமதி அளித்திருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சாந்தனுக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7. 50 மணியளவில் சாந்தன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவலை தெரிவித்தனர்.