தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்து திருநெல்வேலியில், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஏனைய பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டது.