தமிழ்நாட்டில் தேர்தல் நாளன்று அனைத்து நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் என தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 19 விடுமுறை இல்லை என்று ஏப்ரல் 18ஆம் தேதி புகார் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 1950 என்ற புகார் என்னை தேர்தல் ஆணையத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் 92.80 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பூத் ஸ்லிப் வராதவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் அதிகாரிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கு நாளை ஒரு நாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தபால் வாக்குகளை தபால் மூலமாகவே அனுப்ப முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.