தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . மேலும் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கனமழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
மேலும் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது . கோவை , நீலகிரி , திருநெல்வேலி , தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தும், இன்று கனமழை பொழியும் என்று தெரிவித்துள்ளனர் மற்றும் ஈரோடு , தேனி , திருப்பூர் , திண்டுக்கல் , ராமநாதபுரம் , சிவகங்கை , மதுரை , தஞ்சாவூர் , புதுக்கோட்டை , கடலூர் , சேலம் , தர்மபுரி , திருப்பத்தூர் , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .