Home சினிமா முதல்வருக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா….!

முதல்வருக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா….!

முதல்வருக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா….!

by Pramila
0 comment

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி வெளிவந்த படம் “ஜெய் பீம்” .  இப் படம் உண்மை சம்பவத்தை  மையமாகக்  கொண்டு உருவான படம் .  இது ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது . 

இப்படம் காவல்துறையினரின் கொடுமைக்கு ஆளாகும் ஒரு குடும்பத்தின் கதையை  மையமாகக் கொண்டு வெளிவந்தது .  நேற்று  இப்படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில்  இதைப் பற்றி எக்ஸ் வலைதளத்தில் நடிகர் சூர்யா அரசு வழங்கியுள்ள உதவிகள் குறித்த பட்டியல் ஒன்றினை பதிவிட்டு தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். 

மேலும் அவர் “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். #JaiBhim” என்று கூறியிருந்தார்.

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign