தமிழ் சினிமா பிரபலரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். கேப்டன் விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தற்பொழுது இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மதியம் வரை தீவு திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் என்றும் மதியத்திற்கு மேல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி சடங்கு செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி அவரது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து தற்பொழுது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் சென்று கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.