எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பாக பல விவாதங்கள் எழுந்த நிலையில் வழக்குகளும் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி சென்னை ஐகோர்ட் அதிமுக சம்பந்தப்பட்ட சின்னம், கொடி, லெட்டர்பேட் போன்றவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மனு அளித்திருந்தார். அந்த மனுவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்திக் கொள்வதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது. இல்லையெனில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் என இருவருக்கும் சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கலாம் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து மேலும் ஒரு புதிய மனு தாக்கல் செய்திருந்தனர். ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட கோரி அந்த மனதை குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.