Home தமிழ்நாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பில் மகேஷ்…!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பில் மகேஷ்…!

by Pramila
0 comment

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அமைச்சர் அன்பில் மகேஷ் சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரியில் நடைபெறும்   ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க்காக காரில் சென்றுள்ளார் . 

அந்தசமயத்தில் அவருக்கு எதிர்பாராதவிதமாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது .  இதனால் அவரை காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வாயுத்தொல்லை மற்றும்  அஜீரணக்கோளாறு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறினார் . 

அதுமட்டுமின்றி , அவருக்கு மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign