Home » Blog » மழை காரணமாக 5 மாவட்டங்களில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

மழை காரணமாக 5 மாவட்டங்களில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

by Pramila
0 comment

நெல்லை, கன்னியாகுமரி , தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்களில் கனமழை பொழிந்தது . இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது .

கன மழை காரணமாக நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்தும் . அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது . இதனால் கடந்த 18 மற்றும் 19ஆம் தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் இணைப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் . நெல்லை, கன்னியாகுமரி , தூத்துக்குடி , தென்காசி 4 மாவட்டங்களிலும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர் . மேலும் இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் நடைபெற இருந்த தேர்வுகளையும் ஒத்திவைத்து அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது .

கன்னியாகுமரி , தூத்துக்குடி , தென்காசி , நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள இணைப்பு கல்லூரிகளும் நாகர்கோவில் மையத்தில் உள்ள தொலைதூரக் கல்வித் திட்டத்துக்கு வருகின்ற 23ஆம் தேதி வரை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன . இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.