Home » Blog » 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

by Pramila
0 comment

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக திருநெல்வேலி,  கன்னியாகுமரி,  தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக கனமழையானது கொட்டித்தீர்த்தது.  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக கனமழையின் காரணமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்,  காயல்பட்டினத்தில் அதீத மழை பொழிவினால்  பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து 8 மாவட்டங்களில்  இன்று கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.  இது மட்டும் இன்றி வருகின்ற 7  நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே வெளியிட்டுள்ளது. 

நேற்று வரை  குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் நிலவிய வளிமண்டல சுழற்சி தற்பொழுது லட்சத்தீவு பகுதியை நோக்கி நகர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இன்று தென் தமிழகத்தில்  பெரும்பாலான  இடங்களிலும்,  வட தமிழகம்,  காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழைக்கு  வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  மேலும் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  ராமநாதபுரம்,  கன்னியாகுமரி,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை,  நாகப்பட்டினம்,  திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

வருகின்ற 20.12.2023  மற்றும் 21.12.2023  ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் வட தமிழகம்,   காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

22.12,2023  முதல்25.12.2023 வரை தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில்  மிதமான  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதைத் தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்.  நகரில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.