தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. சென்னையை பாதித்த மிக்ஜாம் புயலை தொடர்ந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அதீத கனமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர் இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தலா 6000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் நிவாரண நிதி தொகை 6000 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களில் தேங்கியுள்ள மழை நீரை சரி செய்வதற்காக தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் சுமார் 37 ஆயிரம் கோடி வழங்க கோரிக்கை வைத்திருந்தது. இருந்த போதிலும் மத்திய அரசு அது தொடர்பான எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. தற்பொழுது மத்திய அரசிடம் இருந்து சில முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 397 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
தற்பொழுது மத்திய அரசு தரப்பிலிருந்து 285 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தொடர்ந்து தற்பொழுது 115 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதியாக 397 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த நிலையில் தற்பொழுது 160 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.