சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை இன்று முதல் துவக்கம்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஸ்டை விழா கடந்த 22 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்தனர். தென்னிந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான ராமர் பக்தர்கள் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து அயோத்திக்கு விமான சேவை வழங்குவது குறித்து ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சென்னையிலிருந்து அயோத்திக்கு தினசரி விமான சேவை இன்று முதல் வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும் மதிய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக புதிய விமான நிலையம் முன்னதாகவே கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இன்று முதல் அமல்படுத்தப்படும் சென்னையிலிருந்து அயோத்திக்கு விமான சேவை பக்தர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.