பத்தாம் வகுப்பு பொது தேர்வு நாளை மார்ச் 26ஆம் தேதி தொடங்கும் நிலையில் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 9. 38 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.
நடப்பு ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் கடந்த 22ஆம் தேதி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி பிளஸ் 1 பொது தேர்வு ஆனது தொடங்கி மார்ச் 25 இன்றுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஆனது நாளை மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ந்தேதி முடிவடைய உள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் நாளே தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் தமிழகத்தில் 12,616 பள்ளிகளில் 9 .10 லட்ச மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளதாகவும். தனி தேர்விற்காக 28,827 மாணவ மாணவிகள் தேர்வு எழுத இருப்பதாகவும் மேலும் சிறை கைதிகள் 235 உள்ளிட்ட மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுத இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 4,107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதை தொடர்ந்து நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.