தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்பொழுது தமிழ்நாட்டின் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 317 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டது. மேலும் கோவை மாவட்டத்தில் – 4, நாமக்கல் மாவட்டத்தில் – 2, ஈரோடு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நேற்றைய தினம் 5 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இப்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.