குடும்பத் தலைவிக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து முதல் கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து விடுபட்ட குடும்பத்தலைவிகளுக்கு இரண்டாம் கட்டமாக கடந்த 10 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. இதில் 7 லட்சத்து 35 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திட்டத்தில் பயன்படாதவர்கள் கண்டிப்பாக மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டப்பட்டிருந்தது.
இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாமல் இருக்கும் குடும்ப தலைவிகள் புதிய விண்ணப்பம் ஜனவரிக்கு பிறகு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவலை வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மகளிர் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுவரை மகளிர் உரிமைத்தொகை பெறாமல் இருப்பவர்களுக்கு விரைவில் அதற்கான முக்கிய தகவல்கள் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் இருந்த தகவல் வெளியாகி உள்ளது.