மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தேன் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்பட்ட வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை ஏற்றம் மற்றும் இறக்க நிலை காணப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவை பொறுத்த வரை தங்கம் விற்பனை எப்பொழுதுமே சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் என அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்வதை முதன்மையாக வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 6,150 – க்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 49,200 – க்கு இன்று விற்பனையாகிறது.
மேலும் வெள்ளி விலையில் பெரும் மாற்றம் இல்லை கிராம ஒன்றிற்கு 20 காசுகள் குறைந்து கிராம் ரூ. 79.00 -க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 79,000 – க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.