தங்கம் விலை ஏற்றமும் இறக்கமும் சர்வதேச சந்தையின் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை குறைவதோ, உயர்வதோ நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எப்பொழுதுமே தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறும். நடுத்தர மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை மிக முக்கியமான சேமிப்பாக பார்க்கப்படுகிறார்கள். சில தினங்களாக ஏற்றத்துடனும் இறக்கத்துடனும் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சவரன் ரூ.45,840 – க்கும், கிராம் தங்கத்தின் விலை ரூ. 25 உயர்ந்து ரூ. 5, 730 – க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றிற்கு 40 காசுகள் உயர்ந்து 79. 40 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 79,400 – க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.