ராமநாதபுரம் மாவட்டம் புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் இவருடைய மகன் தீபக் வயது 15. இவர் கடலாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை தீபக் அந்த பள்ளியின் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றினர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவனின் உடலை கைப்பற்றி போலீசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீபக் வழக்கம்போல் பள்ளிக்கு வரும் நேரமில்லாமல் முன்னதாகவே பள்ளிக்கு வந்ததாகவும். பள்ளிக்கு வரும் பொழுதே மிகவும் சோர்வாக வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தீபத்தின் பெற்றோருடன் சில மனஸ்தாபம் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மாணவன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் பெற்றோர்கள் மாணவனை தேடி கண்டுபிடித்து சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்னவென்று போலீஸ் விசாரணை செய்து வருகிறது.