தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை எப்பொழுதுமே சிறப்பாக நடைபெற்று வரும். அவ்வப்பொழுது தங்கத்தின் விலை ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படுவது வழக்கம். தங்கத்தை வாங்குவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு எப்பொழுதுமே ஒரு முக்கிய முதலீடாக காணப்பட்டு வருகிறது.
பொதுவாகவே தங்கத்தின் விலை ஏற்றத்துடனும் இறக்கத்துடனுமே காணப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக அதிர்ச்சி தரும் விதமாக தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டு வந்தது. தற்பொழுது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 5 குறைந்துள்ளது மேலும் ஒரு கிராம் 5435 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது சவரனுக்கு ரூ. 40 குறைந்து காணப்படுகிறது. எனவே ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 43, 480 ஆக தற்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இதே போல் 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 4 குறைந்துள்ளது ஒரு கிராம் 4,452 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ. 32 உயர்ந்தது ஒரு சவரன் ரூ.35,616 ரூபாயாகவும் தற்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.