விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோபிநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் சேனல் ஒன்று கோபிநாத்துக்கு பாராட்டு விழா நடத்தியது அந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர். அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழிசை சௌந்தர்ராஜன் கோபிநாத் என்னுடைய சகோதரர் அவர் பேச்சுத் திறமையை பார்த்து பலமுறை வியந்துள்ளேன் என்று கோபிநாத்தை பற்றி வியந்து பாராட்டினார்.
டிவி தொடர்ந்து கோபிநாத் அவர்கள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பற்றி சில தகவல்களை அந்த மேடையில் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது உயிருக்காக போராடிக் கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு உடனடியாக உதவியவர் தமிழிசை சௌந்தர்ராஜன் என்றும் அந்த குழந்தையை காப்பாற்றுவதற்கு செய்வதறியாமல் திகைத்தபொழுது தமிழிசை சௌந்தரராஜன் இடம் உதவி கேட்டார் கோபிநாத் அப்பொழுது தமிழிசை சௌந்தர்ராஜன் டெல்லியில் மீட்டிங்கில் இருந்து கொண்டிருந்த நிலையில் உடனடியாக பிளைட் பிடித்து வந்துவிட்டார் என்றும் அந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து செய்ய வேண்டிய சிகிச்சைகள் அனைத்தும் செய்து அந்த குழந்தையை யாரும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன நிலையில் அவர் உயிரை காப்பாற்றி கொடுத்துள்ளார் என்று அனைவர் முன்னிலையிலும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்த உதவியை பற்றி கோபிநாத் பகிர்ந்து கொண்டுள்ளார்.