தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. இதை தொடர்ந்து அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமை பெண் திட்டத்தை வரும் கல்வி ஆண்டு முதல் செயல்படுத்த இருப்பதாக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 49,664 மாணவ மாணவிகள் பயன் பெறுவார் என்று கூறப்படுகிறது.
ஏழை மாணவிகளின் கல்வி ஊக்கத் ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை வருகின்ற கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை தமிழ் வழியில் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று பின்பு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் கல்வி பயின்ற மாணவிகளும் திட்டத்தின் கீழ் பயன் பெறுவார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தற்பொழுது இத்திட்டம் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிட்ட நிலையில் தற்பொழுது தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அரசு உதவி பெறும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார் என்று தகவலை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ. 370 கொடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.