கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மிக்ஜம் புயலினால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. பல பகுதிகளில் வெள்ள நீர் சூழந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்பொழுது வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு வாங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று சனிக்கிழமை தென் மாவட்டங்களில் பரவலாக அனைத்து இடங்களிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நாளை வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.