முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் உயிரிழப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் மருமகள் பூர்ணிமா இவருடைய வயது 30 பூர்ணிமா தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் 18ஆம் தேதி பூஜை செய்து விளக்கேற்றிக் கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய ஆடையில் தீப்பற்றியது.
பூர்ணிமா படுகாயம் அடைந்தார் இதை தொடர்ந்து அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். பூர்ணிமாவிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பூர்ணிமா உயிரிழந்துள்ளார்.
இதை தொடர்ந்து தர்மபுரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி. அன்பழகன் குடும்பம் பெரும் சோகத்திற்கு ஆளானது.