2024 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு கௌரவிக்கும் விதமாக இந்த விருது கொடுக்கப்படுகிறது. இந்த பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகள் அடங்கும் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் இந்த பிரிவுகளில் விருதுகள் கொடுக்கப்படுகிறது.
கலைத்துறையில் சிறந்து விளங்கிய தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் உடல் நல குறைவின் காரணமாக இயற்கை எய்திய விஜயகாந்த் தற்பொழுது பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.