கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் கச்சா எண்ணைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்தை கொண்டு நிர்ணயம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள சில தகவலின் அடிப்படையில் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 30.50 குறைந்து ரூ. 1,930 – க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் தற்பொழுது இல்லை என்றும் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ. 818.50 – க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.