Home தமிழ்நாடு ஆதின மடத்தின் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையித்துறைக்கு உயர்நிதிமன்றம் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது….!

ஆதின மடத்தின் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையித்துறைக்கு உயர்நிதிமன்றம் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது….!

by Pramila
0 comment

ஆதின மடத்தின் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையித்துறைக்கு உயர்நிதிமன்றம் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது….!

திருவாவடுரையில் உள்ள ஆதின மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள், மற்றும் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையித்துறைக்கு உயர்நிதிமன்றம் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது . தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது அதில் பேய் மற்றும் நோய்களின் பிடியிலிருந்து விடுபட, ‘பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி பூஜை’ சிறப்பு வழிபாடு செய்யப்படுவது வழக்கம் . 

இந்த பூஜைக்காக பக்தர்கள் அதிகமாக வருவதுண்டு, மேலும் பக்தர்களிடம் இருந்து   அலுவலர் கள் கட்டணம் வசூலிப்பதில் சுமார் ரூபாய் இரண்டு கோடி முறைகேடு நடந்துள்ளதாக  கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும், துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ராதாகிருஷ்ணன் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு விசாரிக்கப்பட்டது .

ஆதின மடத்தின் கட்டுப்பாட்டில் 28,504.33 ஏக்கர் நிலம் உள்ளது.அதில், 222.84 ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது . காசிதர்மத்தில் முன்னதாகவே  699.27 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது 688.65 ஏக்கர் மட்டுமே மடத்தின் பெயரில் உள்ளது.மீதமுள்ள இடம் அனைத்தும் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது . ஆக்கிரமிப்புகளை அகற்ற 2021ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது . 

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு

கோவில்களின் பெயரை வைத்து நன்கொடை, அல்லது  வேறு ஏதேனும் பணத்தை பெறுவதை கோவில் நிர்வாகமே தடுக்க வேண்டும் . பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவை மூலம் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் ஆதாயம் பெற அனுமதிக்கக்கூடாது . ஆதின மடத்திற்கு சொந்தமான நில மற்றும் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறினால் நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக கருதப்படும். உத்தரவை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நிதிமன்றம் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது….!

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign