நீட் தேர்வு தோல்வியால் மாணவர் ஜெகதீஸ்வரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மகன் இறந்த துக்கம் தாளாமல், தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது .
சென்னையில் உள்ள குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வசேகர் மகன் ஜெகதீஸ்வரன் இவரது வயது (19). இவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார் இதனால் மனவேதனை அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தற்போது மகன் உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல், அவரது தந்தை செல்வசேகரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகன் மற்றும் தந்தை இறப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இறங்கல தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச் செயலாளர் , அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித்தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ,வைகோதமாகா தலைவர் ஜி.கே.வாசன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , தமாகா இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா , திக தலைவர் கி.வீரமணி போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் இறங்கல தெரிவித்து வருகிறார்கள்.