நடிகர் கமல்ஹாசன் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கி இதுவரை எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை இதைத் தொடர்ந்து தற்பொழுது எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் மனம் தவறாமல் கோவையில் மக்கள் நீதி மையத்தை நடத்தி வருகிறார். தமிழகத்தில் மக்கள் நீதி மையத்திற்கு மிகக் குறைந்த அளவை வாக்குகள் இருப்பதை உறுதி செய்த கமல்ஹாசன் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி கிடைப்பது கடினம் என உணர்ந்து தற்பொழுது கூட்டணி முடிவை எடுத்துள்ளார்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மைய உறுப்பினர்களுடன் நீண்ட ஆலோசனைக்கு பிறகு தற்பொழுது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் சில செய்திகள் பரவி வருகிறது. இதை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் முன் சென்று திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மையக் கட்சிக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். என்ற தகவலும் கிடைக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பிலிருந்து கூட்டணி வைத்துக் கொள்வதை பொருத்து எந்த தகவலும் வழியாகவில்லை, மேலும் இன்னும் சில நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தரப்பிலிருந்து கமல்ஹாசனுக்கு எந்த அழைப்பும் விடப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.