மழைக்காலங்களில் பலவிதமான நோய்த் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் நிலவும் இதை முன்கூட்டியே கையாளுவதற்கு மருத்துவக்களும் தயாராக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாநில முழுவதும் குழுக்கள் அமைத்து மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கை வட கிழக்கு பருவமழை காலத்தில் பலவகையான நோய்த்தொற்றுகள் ஏற்படும் சூழ்நிலை நிலவும் இதை சிறந்த வழியில் கையாளுவதற்கு மருத்துவர்கள் நோய்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்யாவசியமான மருத்துவ உபகரணங்கள் கைவசம் இருக்கும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தடையில்லா மின்சார வசதி இருக்கின்றதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் கழிவு நீர், மழைநீர் சீராக செல்வதற்கு வடிக்கால் கட்டமைப்பு சீராக உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கிருமி நாசினியை கொண்டு ஆம்புலன்ஸ்களை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் குடிநீரின் தரத்தை அவ்வப்போது கண்காணிப்பது மிகவும் அவசியம். இவ்வாறு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.