Home » Blog » பழனி கோவில்களுக்குள் கேமரா மற்றும் செல்போன் எடுத்து செல்லக்கூடாது – ஐகோர்ட்டு உத்தரவு 

பழனி கோவில்களுக்குள் கேமரா மற்றும் செல்போன் எடுத்து செல்லக்கூடாது – ஐகோர்ட்டு உத்தரவு 

by Pramila
0 comment

பழனி தண்டாயுதபாணி கோவில்குள் வரும் பக்தர்களை தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ள அனுமதிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது . மேலும் கோவில் அடிவாரத்தில் ரூபாய் 5 கட்டணத்தில் மொபைல் போன் மற்றும் கேமராகளை பாதுகாக்கும் வகையில் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . 

பழனி கோவில் கருவறையில் எடுத்த புகைப்படம் என்று சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பரவி வருகிறதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளானா பி.டி.ஆதிகேசவலு , ஆர்.மகாதேவன் ஆகியோர் கோவில் நிர்வாகம் மீது கடும் கண்டனம் தெரிவித்தார்கள் . இதற்க்கு மேல் கோவில் கருவறையில் உள்ள சாமியின் புகை படம் வெளியானால் அறநிலையத்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள் . மேலும் இந்த வழக்கு நேற்று நீதிபதியின் முன் விசாரணை வந்தது . அப்போது பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தனர் .

அந்த அறிக்கையில் பழனி கோவிலுக்குள் மொபைல் போன்கள் மற்றும் கேமராக்கள் கொண்டு செல்ல தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு வருகிற அக்டோபர் 1-ந்தேதி முதல் கடுமையான முறையில் அமல்படுத்தப்படும். தற்போது பழனி கோவில் அடிவாரத்தில் ரூ.5 கட்டணத்தில் மொபைல் போன்களை பாதுகாக்கும் மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

பழனி மலையில் கோவிலுக்குள் மொபைல் போன்கள் கொண்டு செல்லக்கூடாது என ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பக்தர்கள் தங்குமிடங்களில் விளம்பரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பக்தர்களை தீவிரமாக பரிசோதனை செய்த பின்னரே உள்ள செல்ல அனுமதிப்பார்கள் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தது . இதை ஏற்றுகொண்ட நீதிபதிகள் இந்த உத்தரவு அனைத்து கோவில்களுக்கும் செல்லும் என்று தெரிவித்தனர் .

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.