சென்னை மெரினாவில் ரூ. 39 கோடி அளவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வந்த உடன் நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி தற்பொழுது சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது மேலும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று இரவு 7 மணி அளவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் திறப்பு விழா நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் பல்வேறு வகையான சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது.